எங்களைப் பற்றி

19 டிசம்பர் 2016 இல் இணைக்கப்பட்ட “ProtectHealth Corporation Sdn Bhd (ProtectHealth)” நிறுவனம், மலேசியா சுகாதார (MOH) அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட “ProtectHealth Malaysia” நிறுவனத்தின் முழுமையான, முற்றிலும் சொந்தமான, அதிகாரப்பூர்வ துணை நிறுவனமாகும்.

இலாப நோக்கமற்ற நிறுவனமான “ProtectHealth”, மலேசிய சுகாதார அமைச்சின் கோட்பாட்டிற்கு ஏற்றவாறு சுகாதார பாதுகாப்பு சேவைகளுக்கான நிதியளிப்பு தொடர்புடைய திட்டங்களை நிர்வகிக்கும் கடமையை ஏற்றுள்ளது.

“Skim Peduli Kesihatan untuk Kumpulan B40 (Peka B40)” என்பதற்காக Protect Health" என்கிற சுகாதார ஸ்கிம் நிர்வாகி, அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட தகவல் “Manage Care Organization under the Private Healthcare Facilities Services Act 1998 (Act 586)” இன் கீழ் குறிப்பிடவில்லை.மேலும் தகவலுக்கு தகவலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

இயக்குனர்கள் குழு

Tan Sri Dato' Seri Dr. Noor Hisham Abdullah
இயக்குனர்

Dato' Seri Dr. Chen Chaw Min
இயக்குனர்

En. Johari Abdul Muid
இயக்குனர்

En. Nurhisham Hussein
இயக்குனர்

Datin Rosni Mohd Yusoff
இயக்குனர்

நிறுவனத்தின் இலக்கு

 

B40 குழுவிற்கான உடல் நலத் திட்டம் “(PeKa B40)” குறைந்த வருமானம் கொண்ட குழுவினரின் சுகாதார தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் சுகாதார அமைச்சின் மூலம் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சிறந்த திட்டமாகும். தொற்றுநோயற்ற நோய்களுக்கே “(NCDs)” இத்திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது. “PeKa B40” எனும் இத்திட்டம் B40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும், அதாவது குடும்ப வருமானம் 40% கொண்ட மலேசியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அரசாங்க வாழ்வாதார உதவி (BSH) மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணை 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பவர்களுக்கும், இயல்பாகவே PeKa B40 உடல் நலத் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர். மேலும், “PeKa B40” –இல் இணைவதற்கு சிறப்பு பதிவுகள் ஏதும் தேவையில்லை.

“PeKa B40” உடல் நலத் திட்டத்தின் மூலம், கீழ்க்கண்ட ஆரோக்கியம் தொடர்புடைய 4 முக்கியமான பலன்களை பொதுமக்கள் பெறுவர். அவை பின்வருமாறு;-

  1. பலன் 1 - சுகாதாரப் பரிசோதனை
  2. பலன் 2 - மருத்துவ சாதன உதவிகள்
  3. பலன் 3 - புற்றுநோய் சிகிச்சை முழுமையடைவதற்கான ஊக்கத்தொகை
  4. பலன் 4 – போக்குவரத்து ஊக்கத்தொகை

மேற்கண்ட 2, 3 & 4-வது பலன்களைப் பெறுவதற்கு, “PeKa B40”– இன் பெறுநர்கள் முதலில் தங்கள் சுகாதாரப் பரிசோதனையை (பலன் 1) மேற்கொண்டிருத்தல் அவசியம். நாடு முழுவதும் PeKa B40 உடல் நலத் திட்டம் கட்டங் கட்டமாக, தொடங்கப்படும். எனவே, தகுதி வாய்ந்த சுமார் 800,000 மக்கள் முதல் கட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் உடனடியாக அவர்களின் சுகாதாரப் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசாங்கத்தின் ஆணைக்கேற்ப, PeKa B40 உடல் நலத் திட்டம், முழுமையாக “ProtectHealth Corporation Sdn Bhd” நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

 

மேல் விபரங்களுக்கு

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

* கன்டிப்பாக பூர்த்தி செய்யவும்

THIS IS MAP

ProtectHealth Corporation Sdn Bhd
F01 & F02, Tingkat 1, Blok 2300,
Century Square, Jalan Usahawan,
63000 Cyberjaya, Selangor

Telephone:  +603 8687 2500 (General Line)
Telephone:  +603 8687 2588 (Customer Care)
Email:  info@protecthealth.com.my